வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு

வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.;

Update: 2022-05-02 18:43 GMT
கரூர்
நொய்யல், 
நொய்யல், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூர வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர். வெற்றிைல விளைந்தவுடன் பறித்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். 
கடந்த வாரத்தில் 104 கவுளிகொண்ட ஒரு சுமை இளம் பயிர் வெள்ளைக்கொடி வெற்றிலை ரூ.5 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூர வெற்றிலை ரூ.2000-க்கும் விற்பனையானது. அதேபோல் 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ரூ.2500-க்கும், 104 கவுளி கொண்ட முதிகால் கற்பூர வெற்றிலை ஆயிரத்திற்கும் விற்பனையானது. நேற்று 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி வெற்றிலை ரூ.8 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூர வெற்றிலை ரூ.4 ஆயிரத்து 500-க்கும், 104 கவுளிகொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ரூ.4500-க்கும், முதிகால் கற்பூர வெற்றிலை குதிகால் ரூ.2500-க்கும் விற்பனையானது. வரத்து குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்