கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2022-05-02 18:35 GMT
சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த விவசாய கூலி தொழிலாளர்கள் இதுபற்றி சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த நபரின் உடலை கைப்பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

 விசாரணையில், அவர், அதேஊரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கருப்பன் (வயது 52) என்பதும், கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கருப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்