அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சின்னமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.;

Update: 2022-05-02 18:24 GMT
முத்தூர், மே.3-
சின்னமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
அறிவியல் கண்காட்சி
முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சியை பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பி.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில்  1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஆரோக்கியம் நல்வாழ்வு, உணவு பாதுகாப்பு, சட்ட மன்றம் செயல்பாடுகள் தஞ்சை பெரிய கோவில் கட்டுமான முறைகள், பயாஸ்கோப் வகுப்பறை, வில்லுப்பாட்டு, சுதந்திர போராட்ட வீரர்கள், போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள், நீர்ப்பாசன பாதுகாப்பு, கணித மாதிரி ஆற்றல்கள், கணினி செயல்பாட்டின் பயன்பாடுகள், வானவில் ஒளிரும் நிலைகள், தமிழகத்தின் நீர்த்தேக்க அணைகள், கால்வாய்கள் உள்பட பல்வேறு அறிவியல் படைப்புகளை மாதிரிகளாக அமைத்திருந்தனர்.
பரிசு
இந்த கண்காட்சியை பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, மேலாண்மை குழு தலைவர் ரம்யாதேவி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஈஸ்வரன், வரலாற்று ஆர்வலர் சக்தி பிரகாஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து அசோகரின் மனமாற்றம் பற்றிய சிறப்பு நாடகம் நடத்தப்பட்டது. 
முடிவில்  சிறந்த அறிவியல் படைப்புகள் அமைத்திருந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்