நொய்யல்,
புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மது பாட்டிலை வைத்து விற்பனை செய்த பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த வளர்மதி (வயது 50) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மது விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் காணாட்டான்குடி பகுதியை சேர்ந்த முரளி (36) என்பவரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நச்சலூர் அருகே உள்ள சூரியனூர் பறைப்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்த வினோத் ( 34). என்பவர் அவரது வீட்டின் பின்புறம் மது விற்று கொண்டிருந்தார் இதையடுத்து அவரை குளித்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.