பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.

Update: 2022-05-02 18:17 GMT
கரூர்
கரூர், 
கரூர் ராயனூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் கரகம் கோவில் சுற்றி கொண்டு வரப்பட்டது.  தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், பாலமுருகன், பகவதி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்