முத்திரை இல்லாத 179 தராசுகள் எடைக்கற்கள் பறிமுதல்

திருப்பூர் காங்கயத்தில் முத்திரை இல்லாத 179 தராசுகள் எடைக்கற்கள் பறிமுதல்

Update: 2022-05-02 18:17 GMT
திருப்பூர், மே.3-
திருப்பூர், காங்கயத்தில் முத்திரை இல்லாத 179 தராசுகள் எடைக்கற்கள் பறிமுதல்
முத்திரை இல்லாத 179 தராசுகள் 
திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் திருப்பூர் நகரம், காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி ஆய்வு மேற்கொண்டனர்.
 ஆய்வின்போது முத்திரை இல்லாத 121 மின்னணு தராசுகள், 20 மேஜை தராசுகள், 2 விட்ட தராசுகள், 26 இரும்பு எடைக்கற்கள் என 179 தராசுகள் மற்றும் எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  
அபராதம்
முத்திரையிடப்பட்டதற்கான சான்றை வணிகர்கள் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் வைக்காவிட்டாலும், உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடாமல் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும். இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்