புஷ்ப பல்லக்கு திருவிழா

உத்திராபதீஸ்வரர் கோவிலில் புஷ்ப பல்லக்கு திருவிழா நடந்தது

Update: 2022-05-02 18:13 GMT
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடி, மரக்கடையில் பிரசித்தி பெற்ற உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சிவபெருமான் உத்திராபதீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் அமுதுபடையல் வழிபாடு  நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் பக்தர்கள் சாமிக்கு  சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனை நடத்தினர். இதில்  அமுது படையலாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு வானவேடிக்கை மற்றும் நாதஸ்வர இன்னிசையுடன் உத்திராபதீஸ்வரர் புஷ்ப பல்லக்கில் நகர்வலம் செல்லும் வீதிஉலா நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

மேலும் செய்திகள்