4 செம்மறி ஆடுகள் திருட்டு: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
4 செம்மறி ஆடுகள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
க. பரமத்தி,
தென்னிலை அருகே வைரமடையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 52). இவர் கந்தசாமிவலசு பாலக்காட்டு தோட்டம் என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் செம்மறி ஆடுகளை பட்டியில் இருந்து அடைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 2 செம்மறி ஆடுகளை காணவில்லை.
இதேபோல் தென்னிலை கொடுமுடி ரோடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மனைவி தேவி (39). இவர் தொண்டு காளிபாளையம் என்னும் இடத்தில் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவரும் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது 2 செம்மறி ஆடுகளை காணவில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து தென்னிலை போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து செம்மறி ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.