விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குடவாசல் அருேக விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-05-02 18:06 GMT
குடவாசல், மே.3-
குடவாசல் அருகே உள்ள சேங்கனூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர்  பிச்சைமணி(வயது40). விவசாய கூலித்தொழிலாளியான இவர்   கடந்த சில நாட்களாக மிகுந்த மனளைச்சலில் இருந்து வந்தார். இதனால் அவர் சம்பவத்தன்று வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிச்சைமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். 
இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்