காட்பாடி ரெயில் நிலையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காட்பாடி ரெயில் நிலையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காட்பாடி
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
காட்பாடி ரெயில்வே பிளாட்பாரம் அருகே கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினர்.
இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்துவதற்கு வைத்திருந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.