விழுப்புரம் மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

Update: 2022-05-02 17:26 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மயிலத்திற்கும், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கிறிஸ்துராஜ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கும், அங்கிருந்த மணிவாசகம் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் கண்டமங்கலத்திற்கும், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், இவர்கள் உள்பட 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் மோகன் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்