கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
குமாரபுரம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பத்மநாபபுரம்:
குமாரபுரம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபுரம் அருகே மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது 52). கொத்தனாரான இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். நெல்சனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்றுமுன்தினம் மதுகுடித்து விட்டு வந்த போது நெல்சனை அவரது மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் நெல்சன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொற்றிக்கோடு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.