மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் டிரைவர் மீது சரமாரி தாக்குதல்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் டிரைவர் மீது சரமாரி தாக்குதல்
விழுப்புரம்
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு கார் வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் நேருஜி ரோடு மேம்பாலம் அருகில் வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதாக தெரிகிறது. இதை அடுத்து கார் டிரைவரை பலர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்த விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் காரில் வந்தவர்கள் சென்னை ஐ.டி. பார்க் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பதும், பெங்களூருவுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்கு பிறகு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். காரில் வந்தவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.