கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2022-05-02 17:06 GMT
நாமக்கல்:
கிருத்திகையையொட்டி நாமக்கல், பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
பாலதண்டாயுதபாணி சாமி கோவில்
சித்திரை மாத கிருத்திகையையொட்டி நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நாமக்கல்- –மோகனூர் சாலை காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று காலை எண்ணெய், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்டவை கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிகவச அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கடைவீதி சக்தி விநாயகர் கோவில், மாருதி நகர் ராஜகணபதி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும்  சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர்
பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. 
பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்