அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்

அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அம்மையப்பனில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டா் கூறினார்.

Update: 2022-05-02 16:48 GMT
கொரடாச்சேரி;
அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அம்மையப்பனில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டா் கூறினார். 
கிராம சபை கூட்டம் 
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ப.காயத்ரிகிருஷ்ணன்,  பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது 
கிராம சபை கூட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கிராமத்துக்கான வரவு- செலவுகளை  பொதுமக்கள் முன் தெரியப்படுத்துவதே ஆகும். 
 தமிழகஅரசின் நலத்திட்டங்கள் மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று கிடைக்கும் வகையில் உள்ளன. 
19 வகையான பணிகள்
அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து பயன்படுத்தி கொள்ளவேண்டும். கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரும் தங்களது ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை தெரியப்படுத்தலாம்.  திருவாரூர் மாவட்டம் முழுவதும் 430 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. கிராமசபை  கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர், மின்சாரபணிகள், அரசுநிதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாருதல், புதியகுளங்கள் அமைத்தல், பழையகுளங்களை புனரமைத்தல் உள்ளிட்ட 19 வகையான பணிகள் குறித்து  விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். 
 வீடுகள்
கூட்டத்தில் 3 பேருக்கு தலா ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பிரதமமந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளும், தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பருக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் பொன்னியின்செல்வன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள்,  ஊராட்சி தலைவர் முருகதாஸ் உள்ளி் பலா் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்