முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

உம்பளச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

Update: 2022-05-02 16:45 GMT
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு  அபிஷேக ஆராதனைகளும், வீதிஉலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய் திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் ெசய்யப்பட்டு  மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்