கஞ்சாவை போட்டு விட்டு ஓடிய வாலிபர் போலீஸ் வலைவீச்சு

அரக்கோணத்தில் கஞ்சாவை போட்டு விட்டு ஓடிய வாலிபரை போலீசார்தேடி வருகின்றனர்.

Update: 2022-05-02 16:44 GMT
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஷா நகர் பகுதியில் அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இந்தனர். ஷா நகர் சுடு காடு அருகே சென்ற போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் 100 கிராம் கஞ்சாவை போட்டுவிட்டு தப்பி ஓடினார். 

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் அரக்கோணம் ஷா நகர் பகுதியை சேர்ந்த ஹோசன்னா மகன் கோபிநாத் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்