ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை; சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை செய்யப்பட்டார். சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்
பல்லாரி: பல்லாரி டவுன் அகம்பாவி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரா (வயது 34). ரவுடியான இவர் மீது காந்திநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு மகேந்திராவும், காங்கிரஸ் பிரமுகரான தீனா என்பவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த 10 பேர் கும்பல் மகேந்திராவை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீனா தப்பி ஓடிவிட்டார். மகேந்திராவின் உடலை காந்திநகர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் சிலர் பல்லாரி நகர தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டியின் மகன் ஷரவன்குமாரின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இதனால் இந்த கொலையில் சோமசேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக மகேந்திராவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.