மந்திரி அஸ்வத் நாராயண் உடனே பதவி விலக வேண்டும்- சித்தராமையா
மந்திரி அஸ்வத் நாராயண் உடனே பதவி விலக வேண்டும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்
விஜயாப்புரா: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விஜயாப்புராவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணின் சகோதரருக்கு தொடா்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவற்றுக்கு ஆதாரம் இருந்தால் மந்திரி அஸ்வத் நாராயண் உடனடியாக பதவி விலக வேண்டும்.
பெலகாவி விவகாரத்தில் மராட்டிய ஏகிகிரண் சமிதியினர் மீண்டும் பிரச்சினை கிளப்பியுள்ளனர். மராட்டிய அரசியல்வாதிகள் பெலகாவி விஷயத்தில் தேவையற்ற கருத்துகளை கூறியுள்ளனர். பெலகாவி, கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று மகாஜன் அறிக்கை கூறிவிட்டது. அதுவே இறுதி அறிக்கை ஆகும். அரசியல் உள்நோக்கத்துடன் மராட்டிய அரசியல்வாதிகள் அடிக்கடி பெலகாவியை சொந்தம் கொண்டாடும் கருத்துகளை கூறுகிறார்கள். மராட்டிய ஏகிகிரண் சமிதி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசு மென்மையாக நடந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.