ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

நஞ்சுகொண்டாபுரத்தில் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-05-02 16:36 GMT
அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகன் ஆனந்தபாபு (வயது 25),

 ராணுவ வீரரான இவர் சிக்கிம் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோது, பணியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து ஆனந்தபாபு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனால் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் வற்புறுத்தலால் கடந்த 28-ந் தேதி பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் மறுநாளே வீடு திரும்பியுள்ளார். 

இந்த நிலையில், கடந்த 30-ந் தேதி இரவு கமண்டல நாகநதி ஆற்றில் உள்ள சுடுகாட்டில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனந்த்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்