கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே தின விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
மே தின விழா
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். ஆணையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன், நகர செயலாளர் நவாப் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உழைப்பாளர் தினத்தையொட்டி, கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.
பின்னர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என, 500 பேருக்கு, வேட்டி, சட்டை, சேலை, இனிப்பு, பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் மோகன சுந்தரம், கவுன்சிலர்கள் ஜோதி சுகுமார், செந்தில்குமார், சுனில்குமார், ஜெயக்குமார், மீனா நடராஜன், புவனேஸ்வரி, எழிலரசி சரவணன், சீனிவாசன், தேன்மொழி மற்றும் கனல் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா தொழிற்சங்கம்
கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புறநகர் பஸ் டெப்போ மற்றும் சென்னை சாலை டவுன் பஸ் டெப்போவில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த விழாவில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் பால்வளத்தலைவர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராயக்கோட்டை
ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் கெம்பன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
விழாவில் கட்சி நிர்வாகிகள், இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
ஓசூர் சிப்காட் பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தொழிற்சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இதில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் கே.மதன், அமைப்புசாரா ஓட்டுனர்கள் சங்க மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் அசோகா, ஸ்ரீதரன் மற்றும் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இளஞ்சூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.