சூளகிரி அருகே விபத்தில் வாலிபர் சாவு
சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் இறந்தார்.;
சூளகிரி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 30). இவர் மோட்டார்சைக்கிளில் தனது நண்பர் முருகன் (25) என்பவருடன் மேலுமலை பகுதியில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். முருகன் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.