சாராயம் விற்ற 2 பேர் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-02 16:35 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
 கீழ்வேளூர் அருகே தெற்காலத்தூர் மெயின் ரோட்டில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர், நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் மேல்கரையை சேர்ந்த செல்லபாண்டி (வயது 43) என்பதும், அவர் அந்த பகுதியில்‌ சாராயம் விற்றதும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதேபோல் தேவூர் அரசினர் விடுதி பகுதியில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம், வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த ராஜா மகன் சதிஷ் (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்கள் காரைக்கால், வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதுகுறித்து கீழ்வேளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லபாண்டி, சதிஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

----

மேலும் செய்திகள்