கிருஷ்ணகிரி, சூளகிரியில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி, சூளகிரியில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 80). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே உள்ள கோட்ரலப்பள்ளியை சேர்ந்தவர் ரவி (25). போட்டோகிராபர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவரது காதலை அந்த பெண் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.