பாரூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி

பாரூர் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி மனைவியை கத்தியால் குத்தினார்.

Update: 2022-05-02 16:35 GMT
காவேரிப்பட்டணம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஆலமுரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காவேரி (வயது 65). இவரது மனைவி பழனியம்மாள் (45). இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள சந்தனூரில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வேலை செய்து வருகிறார்கள். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் காவேரி, தனது மனைவி பழனியம்மாளை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பழனியம்மாள் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்