உத்தராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடைபெற்றது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 25-ம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அமுது படையல் விழா நடைபெற்றது. இதையொட்டி பஞ்சமூர்த்தி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.