மந்திரி அஸ்வத் நாராயண் மீதான புகார் பற்றி கருத்துக்கூற குமாரசாமி மறுப்பு

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக மந்திரி அஸ்வத் நாராயண் மீதான புகார் பற்றி கருத்துக்கூற குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-02 15:49 GMT
பெங்களூரு:

கர்நாடகத்தில் 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமன தேர்வு நடைபெற்றது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்த தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த முறைகேட்டில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் தேவனஹள்ளியில்  நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக விவரங்களை சேகரித்து வருகிறேன். இதில் மந்திரி அஸ்வத் நாராயணுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

இந்த முறைகேடு கலபுரகி மையம் மட்டுமின்றி பெங்களூரு மையங்களிலும் நடந்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் முழுமையான தகவல் எனக்கு கிடைத்த பிறகு பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி கருத்து கூறுகிறேன். அதுவரை இந்த விவகாரத்தில் வேறு கருத்துகளை கூற முடியாது’’ என்று கருத்துக்கூற மறுத்துவிட்டார்.

மேலும் செய்திகள்