பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2022-05-02 14:43 GMT
கோத்தகிரி

கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 24-வது ஆண்டு வருடாந்திர திருவிழா, கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று புதூர் பகுதியில் இருந்து அம்மன் அழைப்பு நடைபெற்றது.  

இதைத்தொடர்ந்து கோத்தகிரி டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி, பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக முத்து மாரியம்மன் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். இன்று முளைப்பாரி ஊர்வலம் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்