சாலையில் கற்களை வைத்து பொதுமக்கள் போராட்டம்

வேகத்தடை அமைக்கக்கோரி சாலையில் கற்களை வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-05-02 14:34 GMT
கோத்தகிரி

வேகத்தடை அமைக்கக்கோரி சாலையில் கற்களை வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

வேகத்தடை இல்லை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக வேகத்தடை அமைக்கக்கோரி இன்று காலை 8 மணியளவில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் குறுக்கே கற்களை வைத்து போக்குவரத்தை தற்காலிகமாக தடை செய்தனர்.

 இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அந்த சாலையோரத்தில் உள்ள கேர்பெட்டா ஹாயட்டி, ரைபிள் ரேஞ்ச், சிக்குட்டுபெட்டு அம்பேத்கார் நகர் உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புக்கள், லாங்வுட் சோலை வன அலுவலகம், அரசு பள்ளி உள்ளிட்டவை இருக்கின்றன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் நடந்து செல்கின்றனர். ஆனால் வேகத்தடை அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்றனர்.

பேச்சுவார்த்தை

இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்துப்பேசி விரைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்