கஞ்சா விற்ற தம்பதி கைது

கஞ்சா விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-02 14:29 GMT
தேனி:

தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வளையப்பட்டி சாலையில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜபிரபு மனைவி பிரியா (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் விசாரணையில் அவருடைய கணவர் கெப்புரெங்கன்பட்டி  அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்ற ராஜபிரபுவை (37) கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே தலா 2 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்