கெங்கையம்மன் கோவில் திருவிழா

கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் சிரசு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-05-02 12:20 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே மாச்சனூரில் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோவிலி்ல் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு ெகங்கையம்மன் கோவிலுக்கு சென்றது. அங்கு ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டு இருந்த அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு கண் திறக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து அம்மன் தரிசனம், கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், அன்னதானம், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்