குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது
பாண்டியநல்லூர் கிராமத்தில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.;
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி செங்கன் என்பவரின் பனைஓலை குடிசை தீப்பிடித்து எரிந்தது. குடிசையில் இருந்த துணிகள், பொருட்கள் சேதம் ஆகின.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரகுராம்ராஜ் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரிசி ஒரு சிப்பம், மளிகைக் பொருட்கள், காய்கறிகள் என நிவாரணப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. நேரில் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்கள், நிதி உதவியை வழங்கினார். மேலும் அரசு தரப்பில் வழங்கும் தொகுப்பு வீடு கட்டுவதற்காக அதிகாரிகளிடம் தெரிவித்து, ஏற்பாடு செய்வதாக கூறினார்.
அப்போது காங்கிரஸ் நகர தலைவர் கோபால், வழக்கறிஞர் ரகுராம்ராஜ், காங்கிரஸ் சோளிங்கர் தொகுதி பொறுப்பாளர் ராஜா, ஊராட்சி செயலாளர் லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.