திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தூய்மை பணி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சுயநிதிப்பிரிவு வளாகத்தில் தூய்மைப்பணி நடந்தது.

Update: 2022-05-02 12:13 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் (அணி எண் 231 சுயநிதிப்பிரிவு) மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம், தூய்மை இந்தியா திட்டம் சார்பில், தூய்மை பணி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார்.
கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். சுமார் 150 மாணவர்கள் கல்லூரி சுயநிதிப்பிரிவு வளாகத்தை சுத்தம் செய்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பார்வதி தேவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்