வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-02 11:57 GMT
வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் செல்போன், சிகரெட், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக ஜெயில் காவலர்கள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

அதன்படி ஜெயிலர் குணசேகரன் தலைமையிலான காவலர்கள் ஜெயில் வளாகத்தில் திடீரென சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள 4-வது கண்காணிப்பு கோபுரத்தின் கீழே மண் தோட்டப்பட்டு மூடியது போன்று காணப்பட்டது. அதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அந்த இடத்தைத் தோண்டி பார்த்தனர். அங்கு ஒரு செல்போன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஜெயிலர் குணசேகரன் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்