ஆன்லைன் மூலம் போதை மாத்திரை வாங்கி விற்றவர் கைது

ஆன்லைன் மூலம் போதை மாத்திரை வாங்கி விற்றவர் கைது.

Update: 2022-05-02 00:21 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் ஜீவாநகர் அரியான் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). வெல்டராக உள்ளார். பல்லாவரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இவரிடம் இருந்த பையில் ஒரே மாதிரியான மாத்திரை அட்டைகள் அதிகம் வைத்து இருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பல்லாவரம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், போதை மாத்திரைக்கு அடிமையான கார்த்திக், ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்தியதுடன், விற்பனை செய்து வந்ததாகவும் தெரிகிறது.

ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கும் இந்த போதை மாத்திரையை, ஊசி மூலம் உடலில் செலுத்திகொண்டால் நாள் முழுவதும் போதையில் இருக்க முடியும் எனவும் அவர் கூறினார். கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 260 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்