போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.;

Update: 2022-05-01 23:55 GMT
திருச்சி:
திருச்சி ஜீயபுரம் அல்லூரை சேர்ந்தவர் பாஸ்கர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர், தற்போது அயல்பணியாக அரசு மருத்துவமனையில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். அப்போது தன்னுடைய மோட்டார் சைக்கிளை மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிரே உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அவர் மருத்துவமனை வளாகத்தில் இரவு ரோந்து சென்றார். அதன்பிறகு நள்ளிரவு 12.40 மணி அளவில் பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் திருட்டுபோய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடினார். ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் மருத்துவமனை வளாகத்துக்குள் வந்த 2 வாலிபர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. ஆனால் அவர்கள் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்