கார் மோதி காயமடைந்த மயில் மீட்பு
கார் மோதி காயமடைந்த மயில் மீட்கப்பட்டது.;
மணிகண்டம்:
மணிகண்டத்தை அடுத்த ஆலம்பட்டி பிரிவு ரோடு அருகே சாலையில் பறந்து சென்ற பெண் மயில் ஒன்று, அந்த வழியாக சென்ற கார் மீது மோதி காயமடைந்து கீழே விழுந்தது. இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணி, மயிலை மீட்டு நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசாரின் தகவலின்பேரில் வந்த வனத்துறையினர் காயமடைந்த மயிலுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து கொண்டு சென்றனர். மேலும் மணியை அப்பகுதியினர் பாராட்டினர்.