ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவுபெற்றது.

Update: 2022-05-01 23:54 GMT
ஸ்ரீரங்கம்:

தேர்த்திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 24-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், 28-ந் தேதி காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்தார். மாலையில் நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
ஆளும்பல்லக்கு
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. நேற்று இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்