103 லிட்டர் சாராயத்துடன் வாலிபர் சிக்கினார்
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் அருகே 103 லிட்டர் சாராயத்துடன் வாலிபர் சிக்கினார்.
தலைவாசல்:
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் அருகே சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா மேல் பாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 24) என்பவர் சாராயம் விற்பதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 103 லிட்டர் சாராயம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.