காரில் சாராயம் கடத்தியவர் கைது

காரில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-01 22:14 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் சாராயம் கடத்தி வந்ததை கண்டுபிடித்த போலீசார், அந்த கார் மற்றும் அதில் கடத்தி வரப்பட்ட 105  லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும்காரில் சாராயம் கடத்திய, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா சூளாங்குறிச்சியை சேர்ந்த முத்துசாமி (வயது 36) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (51) என்பவர் பஸ்சில் 100 மது பாட்டில்களுடன் சென்றுள்ளார். அந்த பஸ்சை, தளவாய்பட்டி பிரிவு ரோடு அருகே சோதனை செய்த போது பாண்டியனை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்