மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Update: 2022-05-01 21:53 GMT
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரத்து 600 கனஅடி வரை வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 28-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 47 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,735 கனஅடியாக குறைந்தது. இது நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 1,539 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தால் நீர்மட்டம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்