நித்திரவிளை அருகே மீனவர் தீக்குளித்து தற்கொலை
நித்திரவிளை அருகே மீனவர் தீக்குளித்து தற்கொலை;
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செம்மிக்கேல் (வயது75), மீனவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. மேலும் நோயால் அவதி பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற செம்மிக்கேல் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் கழிவறையில் தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.