ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-01 21:06 GMT
நெல்லை:
நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் தொல்லை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் ஜோசப் (வயது 54). இவர் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் இவர் அங்கு படித்த ஒரு மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று ரெட்டியார்பட்டி மலை அருகே வைத்து அந்த மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் மேலகுளம் பகுதியை சேர்ந்த பொன் கணேஷ் (20) என்பவர் அதே மாணவியை ஆசை வார்த்தை கூறி மாணவியின் வீட்டில் வைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

2 பேர் கைது

இதுகுறித்து அந்த மாணவியின் பாட்டி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அருள்ராஜ் ஜோசப், பொன் கணேஷ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார்.

மேலும் செய்திகள்