வேன் டிரைவர் தற்கொலை

பேட்டையில் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-05-01 20:50 GMT
பேட்டை:

நெல்லை பேட்டை திரிபுரசுந்தரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 40). இவர் சொந்தமாக வேன் ஓட்டி வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் (40). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் நேற்று இரவு மாரியம்மாள் தனது மாமியாருடன், குழந்தை இல்லாதது குறித்து ஜாதகம் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முத்துராமலிங்கம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் வீடு திரும்பிய அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மின்விசிறியில் முத்துராமலிங்கம் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துராமலிங்கம் தற்கொலைக்கான காரணம் குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்