ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

நாங்குநேரியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.

Update: 2022-05-01 20:47 GMT
நாங்குநேரி:

நாங்குநேரி- செங்குளம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பாணாங்குளம் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை அந்த வழியாக வந்த ரெயில் ஒன்றில் அடிபட்டு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். ரெயிலில் அடிபட்டு பலியான முதியவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமாரராஜா விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்