பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம்
தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் பகைவரை வென்றான் கிராமத்தில் நடைபெற்றது
இளையான்குடி,
தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் பகைவரை வென்றான் கிராமத்தில் நடைபெற்றது. இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜெமிமா தலைமை தாங்கினார். இதில் பள்ளி மேலாண்மை குழு அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், 4-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி ஆகியோர் அடங்கிய 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் செய்யது ஜமிமா பள்ளியின் குழு அங்கத்தினர்களிடம் மேலாண்மை குழுவின் செயல்பாடு பற்றியும், பொறுப்புகள் பற்றியும் எடுத்து கூறினார். மேலும் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.