பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள சாப்டூரை சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (வயது 21). இவர் மோட்டார் சைக்கிளில் சாப்டூரில் இருந்து அத்திபட்டியில் உள்ள தனது சகோதரியை பார்த்துவிட்டு திரும்பினார். அப்போது பெருமாள் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பாண்டிசெல்வம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாண்டி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். சாப்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.