பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.;

Update: 2022-05-01 20:30 GMT
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவி

தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில் நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இ்ந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருப்பதால் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், கோடை காலங்களில் இங்கு படையெடுத்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மே 1-ந் தேதி அரசு விடுமுறை என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மகிழ்ச்சி

அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், “அகஸ்தியர் அருவியில் குளிப்பது எங்களுக்கு ஆனந்தமாக உள்ளது. கோடை காலத்தில் வேறு எங்கும் தண்ணீர் இல்லாததால் இங்கு வரும் அனைவரும் ஏமாற்றம் அடையாமல் குளித்துச் செல்லும்படி உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.

மேலும் செய்திகள்