சந்தன மரக்கட்டைகளை வெட்டி கடத்திய 5 பேர் கைது

பெங்களூருவில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-05-01 20:17 GMT
பெங்களூரு:

பெங்களூரு விமான நிலைய போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் நகரில் வீடுகள், வனப்பகுதிகளில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக 5 பேரை கைது செய்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள் துமகூரு மாவட்டம் சிராவை சேர்ந்த வெங்கடேஷ், ஆந்திராவை சேர்ந்த வெங்கடரமணா, வெங்கடேஷ்மணி, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டாவை சேர்ந்த அனில், அனில்குமார் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்