கர்நாடகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-05-01 20:15 GMT
பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 10 ஆயிரத்து 566 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பெங்களூருவில் 93 பேர், விஜயாப்புராவில் 3 பேர், பெங்களூரு புறநகர், தட்சிண கன்னடாவில் தலா 2 பேர், பீதர், துமகூரு, உடுப்பி, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். 22 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. மைசூருவில் மட்டும் ஒருவர் இறந்தார். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 

இதுவரை 39 லட்சத்து 47 ஆயிரத்து 726 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 60 பேர் இறந்து உள்ளனர். 1,780 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 0.98 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.96 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்